Jump to content


Photo

குஷி பார்ட் 2: ஓகே சொல்வாரா விஜய்?


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 24 July 2015 - 12:06 AM

 

eqox0tm.png

 

 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000த்தில் எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் , ஜோதிகா, நடிப்பில் காதல், ஈகோ, என இளசுகளில் மனதை அப்படியே படம்பிடித்து காட்டிய படமாக வெளியானது ‘குஷி’. இந்த படத்திற்காக ஜோதிகா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 

 

 

GJUiHhv.jpg?1

 

சிறந்த இசைக்காக தமிழ் நாடு மாநில விருதை தேவா வென்றார். மேலும் எஸ்,ஜே.சூர்யாவின் ‘வாலி’ படத்தையடுத்து இந்த குஷி படமும் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை இப்போது வரை உருவாக்கிக் கொடுத்தது.

 

 

RQsIs2Z.png

 

 

இந்நிலையில் இந்த படம் தனக்கெ சினிமா உலகில் சரியான பாதை அமைத்துக் கொடுத்தது என்பதை விஜய்யும் பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்துள்ளார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்யிடம் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளாராம். 

 

 

cDMa6vc.png

 

 

விஜய் தரப்பிலிருந்து படம் குறித்து இன்னமும் பதில் வரவில்லை. மேலும் துப்பாக்கி, கத்தி, ஜில்லா , என விஜய் ஆக்‌ஷன் நாயகனாக களம் இறங்கிவிட்ட இந்நிலையில் விஜய் இந்த படத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

 

 

Gaf8URp.jpg?1

 

 

ஒருவேளை அவர் சம்மதித்தார் எனில் அவரது ரசிகர்களுக்கு இது பேரின்பச் செய்தியாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users