Jump to content


Photo

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கு முழுக்கு: பிசிசிஐ அறிவிப்பு


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 15 July 2015 - 01:05 PM

sd3s0Qn.jpg?1

 

 

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விளையாடும் டி20 அணிகளை வைத்து நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் (குரூப் சுற்று நீங்கலாக) மொத்தம் 12 அணிகள் போட்டியிடும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் உடனடியாக நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக சாம்பியன்ஸ் லீக் நிர்வாக கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

 

 

இந்த கவுன்சிலைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூன்றும் இணைந்தே இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது. தொடருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுர்ராக் தாக்கூர், "இது கடினமான முடிவு. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடப்படும் (உள்நாட்டு) டி20 போட்டிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் அர்த்தம் கொடுத்தது. தங்களது திறமைகளை வெளிப்படுத்த வீரர்களுக்கு சிறந்த தளமாக இருந்தது. பங்கேற்ற அனைத்து அணிகளுமே இந்தத் தொடரில் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. விளம்பரதாரர்கள், மற்றும் தொடர் சம்பந்தப்பட அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users

IMPORTANT MESSAGE FOR BUYERS : FRIEND DONATE PAGE NOT WORKG FOR UC BROWSER PLS USE FOR OTHER BROWSER ENJOY THA SERVICE

Mountain View