Jump to content


=============================================================================== ======================================================

IMPORTANT MESSAGE FOR BUYERS : Hi friends Torrentrocker.com . Torrentrocker.net wapsite exprid for Nov.10 pls donate frds

Mountain View

=======================================================================================================================================
Photo

கிராமப் பெண்களுக்கான இன்டர்நெட் சைக்கிள் திட்டம்


  • Please log in to reply
No replies to this topic

#1 Kevinsaulp

Kevinsaulp

    Newbie

  • Members
  • Pip
  • 0 posts

Posted 13 July 2015 - 05:09 AM

hHPOjju.jpg?1

 

 

இணையம் குறித்து, இந்தியக் கிராமங்களில் வாழும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க டாட்டா ட்ரஸ்ட்ஸ் மற்றும் கூகுள் இந்தியா இணைந்து, ஒரு புதிய வகை திட்டத்தினை அறிவித்துள்ளன. இதற்கென வடிவமைக்கப்பட்ட “இணைய சைக்கிள் வண்டிகளை” ('Internet Cycle Carts') தொலை தூரங்களில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அனுப்ப இருக்கின்றனர். இந்த சைக்கிள்கள், கிராமங்களில் ஐஸ்கிரீம் அல்லது அது போன்ற பொருட்களை விற்பனை செய்திடும் சைக்கிள்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்களை இயக்கும் “இணைய சாரதிகள்” நம் ஊர் போஸ்ட் மேன் போலச் செயல்படுவார்கள். இவர்கள், கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இணையத்தைப் பயன்படுத்தும் வழிகளைக் கற்றுத் தருவார்கள். இந்த இணைய சைக்கிள் வண்டிகள், அந்த கிராமங்களுக்குத் தகவல்களை வழங்கும், தொலை தொடர்புகளை ஏற்படுத்தித் தரும் ஒற்றைச் சாளரங்களாகச் செயல்படும். 

 

டாட்டா ட்ரஸ்ட் தன் கூட்டாளி நிறுவனங்களுடன், கிராமங்களுக்கு இந்த இணைய சைக்கிள்கள் சென்று வருவதனைச் செயல்படுத்தும். கூகுள் இந்தியா இந்த சைக்கிள்களை இணைய சைக்கிள்களாக மாற்றித் தரும் செயல்பாட்டினை மேற்கொள்ளும். இந்த சைக்கிள்களை இயக்கும் பெண்களுக்கு பயிற்சியை அளிக்கும். இதன் மூலம் இந்தியா, தன் டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைய வழி பிறக்கும்.  இந்த இணைய சைக்கிள் தொடக்க விழாவில் டாட்டா ட்ரஸ்ட் தலைவர் ரத்தன் டாட்டா மற்றும் கூகுள் இந்தியா தென் கிழக்கு ஆசியா துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இணைய சைக்கிள்களை இயக்குபவர்கள், கிராமப் புற பெண்களுக்கு, இணையத்தைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை பயிற்சியினை வழங்குவார்கள். இணையம் தரும் பயன்கள் குறித்து எடுத்துரைப்பார்கள். நகரங்களில் வாழும் பெண்கள், இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதில் விரைவாகச் செயல்படுகின்றனர். ஆனால், கிராமப்புற இந்தியப் பெண்கள் இந்த வகையில் பின் தங்கியே இருக்கின்றனர். கிராமப் புறங்களில் இணையத்தைப் பயன்படுத்துவோரில், 12% பேரே பெண்களாக இருக்கின்றனர். இந்த நிலையைப் போக்கிட, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கூகுள் இந்தியா துணைத் தலைவர் கூறியுள்ளார். இணைய இணைப்பு என்பது, எந்த ஒரு சமுதாயத்திற்குமான அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இதனைப் பயன்படுத்துகையில், மக்களின் கல்வி அறிவு விரிவடைகிறது. சமுதாய பொருளாதார மாற்றத்திற்கான, தகவல்களை அணுகும் வழிகளைத் தருகிறது.

 

இந்த இணைய சைக்கிள்கள், முதலில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தங்கள் பணியைத் தொடங்குகின்றன. அடுத்த 18 மாதங்களில், 4,500 கிராமங்களில் வாழும் 5 லட்சம் கிராமப் பெண்களை இந்த பயிற்சி சென்றடைய உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும், வாரம் இரு நாட்கள் இந்த இணைய சைக்கிள்கள், இணையப் பயிற்சியினை வழங்கும். ஒரு கிராமத்தில் அல்லது இணைக்கப்பட்ட கிராமங்களில், நான்கு முதல் ஆறு மாதங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படும். 

 

இந்த முயற்சியில் இண்டெல் நிறுவனமும் இணைந்துள்ளது. இண்டெல் ஏற்கனவே, பெண்களுக்கான டிஜிட்டல் கல்வியைத் தருவதில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் கூட்டாளியாக உள்ளது. டாட்டா ட்ரஸ்ட், ஏற்கனவே, சமூக, பண்பாடு நிகழ்வுகளை கிராமங்களில் மேற்கொள்ளும் திட்டத்தினை, 16 மாநிலங்களில், 170 மாவட்டங்களில், 8 லட்சம் வீடுகளில் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய சைக்கிள் திட்டம், தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும்.






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users